குறிப்பு:

திருத்துறைப்பூண்டி வட்டத்தில் பொன்னிரை என்னும் தொடர் வண்டி நிலையத்திற்கு வடக்கே 6 கி.மீ.தூரத்திலுள்ள சிற்றாய் மூரைத் திருச்சிற்றேமம் என்று மக்கள் வழங்குவது பெருந்தவறாகும். சிற்றாய்மூரிலுள்ள கல்வெட்டுக்கள் அவ்வூரைச் சிற்றாமூர் என்று கூறுகின்றன. அப்பர் சுவாமிகள் அவதரித்தருளிய திருவாமூரின் வேறு என்பதற்குச் சிற்றாமூர் என்று இது வழங்கப்பெற்றதாதல்வேண்டும்.